திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆவடி தொகுதி வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜாமணி அவர்களின் தாயார், அன்பிற்கினிய அம்மா லோகும்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த பாசமிகு அன்னையை இழந்து வாடும் தம்பி ராஜாமணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லோகும்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



