முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள். செடியில்…

0

வாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள்.

செடியில் இலைகள் அதிகம் என்றாலும், பூப்பது ஒரு மலர் என்றாலும் மலருக்குத்தான் மதிப்பு அதிகம்.

வெற்றியும் தோல்வியும் இருபடிகளே. ஒன்றில் உங்களை உணர்ந்துகொள்வீர்கள். மற்றொன்றில் உங்களைத் திருத்திக்கொள்வீர்கள்.

நிமிர்ந்து நிற்பதெல்லாம் பலம் என்றோ, வளைந்து கொடுப்பதெல்லாம் பலவீனம் என்றோ முடிவெடுத்துவிடாதீர்கள்.

நிமிர்ந்து நிற்கும் வேலைவிட வளைந்துகொடுக்கும் வில் – அம்புதான் அதிக தூரம் பாயும்.

வென்றவனுக்கு நீங்கள் கைதட்டும்போது, அவன் காதுகளுக்குக் கேட்காத உயரத்தில் இருப்பான்.

தோற்றவனுக்குத் தோள்தட்டுங்கள், நீங்கள் அவன் நினைவில் இருப்பீர்கள்.

தோல்வி என்பது வாழ்க்கையில் கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர, அவமானம் ஏதுமில்லை.

வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை. ஆனால் வந்த எதுவும் எதையும் சொல்லிக்கொடுக்காமல் விடுவதில்லை.

எதிர்பார்த்தபோது கிடைக்காத எதுவும், அதன்பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் மகிழ்ச்சியளிப்பதில்லை. அன்பும் அப்படித்தான்.

உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களிடம் வார்த்தைகளால் போராடுவதைவிட, மௌனமாகக் கடந்துசெல்வதே மேலானது.

Exit mobile version