திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – மண்ணச்சநல்லூர் வடக்கு ஒன்றிய மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்பு சகோதரி ஆசிரியர் சு.தனலட்சுமி (அகிலா) அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயருற்றேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான தமிழ்த்தேசிய அரசியலின் மீதான பெரும்பற்றின் காரணமாக, நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, களப்பணியாற்றிவந்த சகோதரி தனலட்சுமி அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
சகோதரியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு சகோதரி ஆசிரியர் சு.தனலட்சுமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



