முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்! சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த…

0

அவசர சிகிச்சைக்கு உதவிடுவோம்!

சென்னை, இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இராதாகிருஷ்ணன் நகர் 39ஆவது வட்டத் துணைத்தலைவரும், துடிப்புமிக்க களப்பணியாளருமான அன்புத்தம்பி இரா.ஆனந்த் அவர்களின் மனைவி நிர்மலா (வயது 33) அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வந்த மகிழுந்து மோதிய விபத்தில் சிக்குண்டு தலையில் பெருங்காயமடைந்து அதிகப்படியான குருதி வெளியேறியதில் சுயநினைவிழந்து உயிருக்கு ஆபத்தான சூழலில் சென்னை ஒ.எம்.ஆர். அப்பல்லோ மருத்துவமனையில் (CSPIP59290) அனுமதிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுவரும் செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

எதிர்பாராத சூழலில் ஏற்பட்ட விபத்தில் இருந்து தனது மனைவியின் உயிரைக் காப்பாற்ற தேவையான சிகிச்சைக்குரிய தொகையை ஏற்பாடு செய்ய இயலாமல் அல்லற்படும் அன்புத்தம்பியின் பரிதாபகரமான நிலை கேட்டு செய்வதறியாது தவிக்கிறேன்.

சகோதரி நிர்மலா அவர்களின் உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு உடனடியாக ரூபாய் 8 இலட்சம் வரை தேவைப்படுவதால், உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும், பொருளாதார வலிமைப்படைத்த நல்ல உள்ளங்களும், தங்களால் இயன்ற தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தம்பி ஆனந்த் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி உதவிடுமாறு வேண்டுகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வங்கி கணக்கு விவரம்:

பெயர் : ஆனந்த் ( ANAND R)
வங்கி கணக்கு எண் : 50100153699829
வங்கியின் பெயர் : எச். டி. எப். சி வங்கி (HDFC BANK)
IFSC : HDFC0000082
GPAY / UPI: 9884785455
தொடர்புக்கு: 9884785455

Exit mobile version