கள்ளக்குறிச்சி மாவட்டம், இரிசிவந்தியம் தொகுதி, இராவுத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இரிசிவந்தியம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுதாகர் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி சுதாகர் அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சுதாகர் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



