திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பொருளாளர் அன்புத்தம்பி அமீன் முகமது இர்சாத் அவர்களின் பாசமிகு தந்தை பெருமதிப்பிற்குரிய ஐயா முகமது உஸ்மான் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பேணிவளர்த்த தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பி அமீன் முகமது இர்சாத் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முகம்மது உஸ்மான் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



