முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர்…

1

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருவொற்றியூர் தொகுதிச் செயலாளர் அன்புச் சகோதரர் ம.சந்திப்பெருமாள் மற்றும் அமீரகம் செந்தமிழர் பாசறைப் பொருளாளர் அன்புச் சகோதரர் ம.இராமகிருஷ்ணன் ஆகியோரின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ச.மணி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் சகோதரர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா மணி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version