முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – போளூர் தொகுதி தகவல் தொழிநுட்பப்…

0

நாம் தமிழர் கட்சி – போளூர் தொகுதி தகவல் தொழிநுட்பப் பாசறையின் இணைச் செயலாளர் அன்புத்தம்பி பரணி அவர்களின் தாயார் ஜெயக்கொடி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் தம்பி பரணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

சகோதரி ஜெயக்கொடி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

Exit mobile version