முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உங்களை வெறுப்பவர்களை நினைத்து, கவலை கொள்ளாதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைப்…

1

உங்களை வெறுப்பவர்களை நினைத்து, கவலை கொள்ளாதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைப் பெறுகிற தகுதி இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள் !

எல்லோர் இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வேறுபடுகிறது. சிலர் கண்ணீரால் வெளிப்படுத்துகிறார்கள். சிலர் புன்னகையால் வெளிப்படுத்துகிறார்கள் ! சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை. கவலைகளை மறக்கக் கற்றுக்கொண்டவர்கள் !

அன்பை மட்டுமல்ல, கோபத்தையும்கூட அதற்குத் தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள் !

நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் உறவுகள் கிடைப்பதைவிட, நம்மை உதறித் தள்ளிவிடாத உறவுகள் கிடைப்பதே வரம்.

நீங்கள் தவறவிட்ட வாழ்வு உங்களுக்கானது இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கான வாழ்வு என்பது நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே !

எளிதாய் கிடைக்கும் வெற்றியைவிட, போராடிக் கிடைக்கும் தோல்விக்குப் பலம் அதிகம். வெற்றி ஒரு பதக்கத்தைப் பெற்றுத் தரும். தோல்வி பல பாடங்களைக் கற்றுத் தரும் !

Exit mobile version