முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான அரசியல் புரட்சியில் என் தோளுக்கு துணையாக…

0

தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான அரசியல் புரட்சியில் என் தோளுக்கு துணையாக நின்று களமாடும் அயராத களப்போராளி, வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்கு போராடிய பெருந்தகை, மதிப்பிற்குரிய ஐயா ரங்கராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையுற்றேன்.

பேணி வளர்த்த தந்தையை இழந்து வாடும் தம்பி கோகுல் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

தொழிற்சங்கவாதி ஐயா ரங்கராஜன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version