நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான என்னுயிர் இளவல் முனைவர் செந்தில்நாதன் சேகுவேரா அவர்களின் தந்தையார் அப்பா துரைராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த துயரமும் அடைந்தேன்.
(1/2)

அப்பாவை இழந்து வாடும் தம்பி செந்தில்நாதனுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவிப்பதோடு, ஆற்றொணாத் துயரில் பங்கெடுத்து, தம்பிக்குத் துணைநிற்கிறேன்!
அப்பாவின் மறைவு தம்பிக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.
அப்பாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)


