முகப்பு கட்சி செய்திகள்

திருவள்ளூர் தொகுதி 10-ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம்

101

நாள் : 21.11.2021
இடம் : கே வி எஸ் திருமண மண்டபம், திருவாலங்காடு

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு 21.11.2021 அன்று 10-ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் தொகுதி 35 உறவுகள் தங்கள் குருதியினை கொடையாக அளித்தனர். குருதி கோடை அளித்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
இந்நிகழ்வில் குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர் அரிமா மு.பா.செ. நாதன், தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் பெ.பசுபதி மற்றும் திருவள்ளூர் தொகுதி, ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909

 

Exit mobile version