முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் சார்பாக, நாளை (01-09- 2026) ஆவணி 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, மூவர் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படவேண்டும்

5

க.எண்: 2026080246
நாள்: 31.08.2026

முக்கிய அறிவிப்பு:

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன், தமிழ்த்தேசியப் பேரொளி அண்ணன் தமிழரசன், அன்புத்தங்கை அனிதா ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகள் சார்பாக, நாளை (01-09- 2026) ஆவணி 15ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, மூவர் நினைவைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படவேண்டும் எனவும்,
இந்நிகழ்வில், சமூக நீதிக்கு எதிரான ‘நீட்’ தேர்வுமுறையை ஒழிக்க சட்டத்தின் வழிநின்று போராடி, கல்வி உரிமையைக் காக்க தன்னுயிர் தந்த அன்புத்தங்கை அனிதா அவர்களின் நினைவுநாளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, இளம் பிஞ்சுகளின் உயிரைக் குடிக்கும் கொடிய ‘நீட்’ தேர்வுமுறையை முற்றாக தடை செய்ய இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை முழக்கங்களை எழுப்பி, ‘நீட் தேர்வைத் தடை செய்வோம்! தங்கை அனிதாவின் கனவைக் காப்பாற்றுவோம்’ என்ற உறுதிமொழியை நாம் தமிழர் பிள்ளைகள் ஏற்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். எனவே, கட்சி மற்றும் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் ஒருங்கிணைந்து நிகழ்வை முன்னெடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version