மூத்த அரசியல் தலைவரும், மதிமுக துணைப் பொதுச்செயலாளருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் துரை.பாலகிருஷ்ணன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், அண்ணன் வைகோ அவர்களுக்கும் மற்றும் மதிமுக தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கேற்கிறேன்.

ஈழ விடுதலை சார்ந்த போராட்டங்களிலும், காவிரி நதிநீர் உரிமைப் போராட்டங்களிலும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்திற்கு எதிரான தாய்மண் காக்கும் போராட்டங்களிலும் பெரும்பங்காற்றிய அவரது இழப்பு அண்ணன் வைகோ அவர்களுக்கும், தமிழக அரசியல் களத்திற்கும் ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! (3/3)
தொடக்கக் காலத்திலிருந்து மதிமுக-வின் வளர்ச்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு அண்ணன் வைகோ அவர்களுடன் பக்கத்துணையாக நின்று அரசியல் பணிகளை மேற்கொண்டவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் மூத்த அரசியல் செயற்பாட்டாளராக பல்வேறு அரசியல் சமூக இயக்கங்களில் பங்கெடுத்தவர். (2/3)