காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த எல் & டி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்ததாரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று அம்மக்களின் வேண்டுகோளுக்கிணங்க @CMOTamilNadu அவர்களுக்கு கோரிக்கை மனு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.



இனியும் காலம் கடத்தாமல் காட்டுப்பள்ளி குப்பம் மக்களின் கோரிக்கைக்கிணங்க ஒப்பந்தப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும். இதே நிலை நீடிக்குமாயின் சட்டத்திற்குட்பட்டு அவர்களுக்கு தேவையான உரிமைகளை போராடிப்பெற்றுத்தரவும் தயங்கமாட்டேன் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
(4/4)
எல் & டி கப்பல் கட்டுமானத் தளத்திற்காக 2008ல் காட்டுப்பள்ளி குப்பத்தை சேர்ந்த மக்கள் இடமாற்றம் செய்யப்பட்ட போது, வேலை இழந்தவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்டு, தற்போது வரை அவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாகவேப் பணியாற்றி வருகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.
(3/4)
இம்மின்னஞ்சலுடன் தமிழக முதல்வர் பார்வைக்கு அம்மக்களுக்கு இழைக்கப் பெற்றிருக்கும் சிக்கல்களைப்பற்றியும், அவர்கள் எதிர்பார்க்கும் தீர்வினையும் முன்வைத்து அவர்களின் சார்பில் விரிவானதொரு கோரிக்கை மனுவினையும் இணைத்துள்ளேன்.
(2/4)


