முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சாலை விபத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் – பெருமாள் கோவில்பட்டி…

1

சாலை விபத்தில் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் – பெருமாள் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அன்புத்தம்பி ஆரோக்கியச் செபாஸ்டின் ராஜா மரணமடைந்த செய்தி மிகுந்த மனவலியைத் தருகிறது. பெற்ற பிள்ளையை இழந்து தவிக்கும் அந்தத் தாய்க்கு என்ன ஆறுதலைக்கூறித் தேற்றுவது?

இனியேனும் தம்பி, தங்கைகள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது இடைவார் அணிய வேண்டும், அதிவேகமாகச் செல்வதைத் தவிர்த்து, நிதானமாக, பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும்.

கட்சி, தேர்தல், அரசியல், ஆட்சி இவை எல்லாவற்றையும்விட நீங்கள் எனக்கு மிகமுக்கியம். உங்களது பாதுகாப்பு எனக்கு முக்கியம். நமது அரசியலே மக்களின் பாதுகாப்பான நல்வாழ்விற்காகத்தான். எனவே அதில் நீங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது.

Exit mobile version