நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அப்துல் வகாப் அவர்களின் அன்புமகள் ஆசிபா மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,பெருந்துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பிக்கு எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்.
(1/2)
மகள் ஆசிபா பற்றிய நினைவுகள் என்னைப் பெரிதும் ஆட்கொண்டு வாட்டுகின்றது. இந்த இழப்பு தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் பாதித்திருக்கிறது.
தம்பியின் துயரில் பங்குகொண்டு, குடும்பத்தாரோடும், உறவுகளோடும் உடன்நிற்கிறேன்!
மகளுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)


