முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துப்பரப்புரை செய்ததால் பெங்களூரு…

0

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயப்போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்துப்பரப்புரை செய்ததால் பெங்களூரு சூழியல் செயற்பாட்டாளரும், கல்லூரி மாணவியுமான 21 வயதே நிரம்பிய தங்கை #திஷாரவி அவர்கள் கொடுஞ்சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன்.

அரசியலமைப்புச்சாசனம் வழியாக இந்நாடு வழங்கியிருக்கும் கருத்துச்சுதந்திரம் எனும் அடிப்படை உரிமைக்கெதிரான இக்கோரத்தாக்குதல் பாசிசவெறி பிடித்த பாஜக அரசின் அரசப்பயங்கரவாதச் செயலாகும்.

போராடினாலோ, மாற்றுக்கருத்தை முன்வைத்தாலோ அவர்களைச் சமூக விரோதிகளெனவும், தேசத்துரோகிகளெனவும் விளித்து, அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் இப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

Exit mobile version