முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று…

0

மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் வாகனப்பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

(1/4)

சொந்த நாட்டின் குடிகளையே துளியும் மதித்திடாதப் போக்கின் மூலம் நாட்டைத் தலைகுனியச் செய்து விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்!

(4/4)

விவசாய நாடு என அண்ணல் காந்தியடிகளால் கொண்டாடப்பட்ட இந்நாட்டில், குடியரசு தினம் நாடெங்கும் நினைவுகூறப்படுகிற இவ்வேளையில் விவசாயப் பெருங்குடிகள் மீது ஏவப்படும் அரசப்பயங்கரவாதத்தின் மூலம் சர்வதேசச் சமூகத்தின் முன்பு இந்தியா, அவமானத்தின் சின்னமாய் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.(3/4)

Exit mobile version