தமிழ்த்தேசியத் தலைவர், ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவரும், புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளரும், மூத்த ஊடகவியலாளருமான மதிப்புக்குரிய ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் மறைந்தார் எனும் செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன்.
https://bit.ly/2KK1gbN


ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் இம்மண்ணைவிட்டு நீங்கினாலும் தமிழர்களின் நெஞ்சைவிட்டு ஒருநாளும் அகலப்போவதில்லை. தலைமுறைகள் பல கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!


