சென்னை, குன்றத்தூர் அருகே புழக்கத்திலுள்ள போதைப்பொருள் வியாபாரம் குறித்த செய்தி வெளியிட்டதால் தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் தம்பி மோசஸ் அவர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
படுகொலை செய்த சமூகவிரோதக் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்.


போதைப்பொருள் வணிகம் நடைபெறுவதை வெளிக்கொணர்ந்தததையும், அதற்காகவே கொலை செய்யப்பட்டதையும், காவல்துறை இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டியதையும் கணக்கிட்டுப் பார்க்கிறபோது காவல்துறை ஒத்துழைப்போடுதான் போதைப்பொருள் சார்ந்த வணிகம் நடக்கிறதோ எனும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
கஞ்சா வணிகம் குறித்த செய்தி வெளியிட்டதற்காக ஒரு செய்தியாளரை சமூகவிரோதக் கும்பல் மிகச் சாதாரணமாக வெட்டிப்படுகொலை செய்கிறதென்றால் போதைப்பொருள்களை வணிகம் செய்திடும் இக்கும்பலின் ஆதிக்கம் எந்தளவில் சமூகத்திலிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
தமிழக அரசு விரைந்து செயல்பட்டு தம்பி மோசசை படுகொலை செய்திட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்.
அவரது குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்கிட வேண்டும்.
போதைப்பொருள் வணிகம் செய்திடும் சமூக விரோதக் கும்பலைக் களைந்திட தனிப்படை அமைக்க வேண்டும்.
@CMOTamilNadu



