செய்திக் குறிப்பு: கன்னியாகுமரி, தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
பதிமூன்றாம் நாளான நேற்று 06-04-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெயன்றீன் அவர்களை ஆதரித்து நாகர்கோயில்,அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி: https://www.youtube.com/watch?v=WHZ97TabWfk
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கிரிஸ்டன்டைன் .இராஜசேகர் அவர்களை ஆதரித்து தூத்துக்குடி,தளமுத்து நகர்,கிறிஸ்துவ ஆலையம் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
		
			

![[LIVE] தூத்துக்குடி | 06-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanSpeech #Thoothukudi](https://i.ytimg.com/vi/Ea3nb5AvrD8/hqdefault.jpg)


