முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் வகையில் த.வெ.க. அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்திமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

8

க.எண்: 2026070218
நாள்: 08.07.2026

அறிவிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அணுக்கனிமக் கொள்ளை, கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் வகையில் த.வெ.க. அரசு IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற ஆனி 26ஆம் நாள் (10-07-2026) வெள்ளிக்கிழமை மாலை 03:30 மணியளவில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு,(பூங்கா அருகில்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
நாம் தமிழர் கட்சி

ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் நடத்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஆனி 26 வெள்ளிக்கிழமை | 10-07-2026 மாலை 03:30 மணிக்கு
இடம்:
வேப்பமூடு சந்திப்பு,(பூங்கா அருகில்) நாகர்கோவில்
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version