செய்திக் குறிப்பு: தஞ்சாவூர், திருவாரூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.
பதினைந்தாம் நாளான நேற்று 08-04-2019 திங்கட்கிழமை மாலை 05 மணியளவில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் புலவர் கிருஷ்ணகுமார் அவர்களை ஆதரித்தும், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.கார்த்திக் அவர்களை ஆதரித்து தஞ்சாவூர்,ஆபிரகாம் பண்டிதர் சாலை,(சாந்தி கமலா திரையரங்கம் அருகில்) அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
காணொளி: https://www.youtube.com/watch?v=_rmHezX_0F4
அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், நாகப்பட்டிணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பொ.மாலதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ர.வினோதினி அவர்களை ஆதரித்து திருவாரூர், பனகல் சாலை, பேருந்து நிலையம் அருகில். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
 
		 
			

![[LIVE] திருவாரூர் | 08-04-2019 சீமான் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் #SeemanSpeech #Thiruvaroor](https://i.ytimg.com/vi/qi6avGkux4c/hqdefault.jpg)


