முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று…

0

கத்தார் நாட்டிலுள்ள ராஸ்-லஃபான் தொழிற்பேட்டைப்பகுதியில் இயங்கி வரும் ராஸ்-லஃபான் எரிகாற்று நிறுவனத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பபித், சஜித்குமார், சுவின் ஆகிய மூன்று தமிழர்கள் உட்பட 12 இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரில் பங்கெடுக்கிறேன்.

இளம் வயதில் குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உழைக்கச் சென்றவர்களை இழந்து நிற்கும் மூன்று குடும்பங்களுடைய எதிர்கால நலனைக் கருத்தில்கொண்டு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version