நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அழகப்பபுரம் பேரூராட்சியைச் சேர்ந்த குவைத் செந்தமிழர் பாசறையின் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜோ.அந்தோணி ஆல்டன் அவர்களின் அன்புச்சகோதரர் ராஜேஷ் தம்பி ஜோ.வில்சன் செல்வதாஸ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஜோ.வில்சன் செல்வதாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!




