முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழர் இன அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியம் என்ற தன்னகரில்லா கோட்பாட்டை…

0

தமிழர் இன அரசியல் வரலாற்றில் தமிழ்த்தேசியம் என்ற தன்னகரில்லா கோட்பாட்டை முன்னிறுத்தி தன்னலமில்லாமல் தொடர்ந்து களத்திலே இயங்கிக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோபிசெட்டிபாளையத்தில் 01-03-2026 அன்று நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுவில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதாக தீர்மானம் இயற்றியிருப்பது மிகப்பெரிய பெருமையையும் , பேருவுவகையையும் எங்களுக்கு அளிக்கிறது.

தமிழ்த் தேசிய தத்துவக் களத்தில் எங்களது முன்னத்தி ஏராக தமிழ்த் தேசிய இன நலனுக்காக எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்த பெருமக்களின் இந்த ஆதரவு நாம் தமிழர் கட்சியின் தொடர் இனப்பணிக்கு கிடைத்திருக்கிற மகத்தான விருதாகவும், தமிழர் இன உரிமை அரசியல் நகர்வில் ஒரு மைல் கல்லாகவும் கருதி பெருமிதம் அடைகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழர் இன நலன்களுக்காக போராடி வருகிற எங்களுக்கு, பேரறிவும் பெரும் தொண்டும் நிரம்பிய எங்களது மூத்தவர்கள் அளித்திருக்கிற பெருமைமிக்க அங்கீகாரமாக கருதி நெஞ்சம் மகிழ்கிறோம்.

இந்த தீர்மானத்தை இயற்றிய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் எம் பெரு மதிப்பிற்குரிய தமிழ்த் தேசிய தத்துவ பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்த் தேசிய பேரறிஞர் ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களுக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், வரலாற்றுப் பெருமை வாய்ந்த சிறப்பு பொதுக் குழுவில் பங்கேற்ற பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் , மனம் நிறைந்த நன்றிகளை நாம் தமிழர் கட்சி தெரிவிக்கிறது. நாம் தமிழர் கட்சியின் மீது தமிழ்த் தேசியப் பேரியக்கம் கொண்டிருக்கின்ற பெரும் நம்பிக்கையை எப்போதும் நாங்கள் காப்பாற்றுவோம் என்பதை இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உறுதியாக
தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் தமிழர் இன அரசியல் களத்தில் இன்னும் தனித்துவத்தோடும், எவ்வித சமரசம் இல்லாமலும் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து இயங்கிட பெரும் ஊக்கமாக அமைகிறது.

எங்களது பகைவர் எங்கோ மறைந்தார்..!
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

அன்பு நிறைந்த நன்றியுடன்…
செந்தமிழன் சீமான்

Exit mobile version