முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – ‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, கலந்தாய்வுக் கூட்டம்

23

க.எண்: 2026020094
நாள்: 28.02.2026

நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த சென்னை மண்டலங்களின் சார்பாக சென்னை – சைதாப்பேட்டை, சின்னமலையில் ( வேளச்சேரி சாலை, A2B அருகில் ) நடைபெறவிருக்கும் ‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நாளை 01-03-2026 காலை 10:30 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் (இராவணன் குடில்) மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version