தலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை, குருதிக்கொடைப் பாசறை ஆகிய பாசறைகளின் பங்களிப்புக் குறித்த கலந்தாய்வு

29

க.எண்: 2026020085
நாள்: 18.02.2026

திருச்சியில் வருகின்ற 21.02.2026 அன்று நாம் தமிழர் கட்சி நடத்தவிருக்கும் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், முன்னாள் பாதுகாப்புப் படைவீரர்கள் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை, குருதிக்கொடைப் பாசறை ஆகிய பாசறைகளின் பங்களிப்புக் குறித்த கலந்தாய்வு மாசி 08 வெள்ளிக்கிழமை (20.02.2026) அன்று காலை 10 மணிக்கு திருச்சி ஆலம்பட்டிபுதூர் மாநாட்டுத் திடலில் நடைபெறவிருக்கிறது.
இக்கலந்தாய்வு குறித்த கூடுதல் தகவல்களுக்கு, முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் பாசறை மாநிலப் பொறுப்பாளர் பூமிநாதன், சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர் வெண்ணிலா தாயுமானவன், குருதிக்கொடைப் பாசறை மாநிலப் பொறுப்பாளர் அரிமா.செந்தில்நாதன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அதிமுக்கிய இக்கலந்தாய்வில் மேற்குறிப்பிட்ட பாசறைகளின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி