க.எண்: 2026010026
நாள்: 20.01.2026
எம்முயிர்த் தமிழ் காக்க; தம்முயிர் ஈந்த ஈகியரின் நினைவைப் போற்றும்
மொழிப்போர் ஈகியர் நாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் வருகின்ற தை 11ஆம் நாள் (25-01-2026) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மொழிப்போர் ஈகியர் நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
மொழிப்போர் ஈகியர் நாள் மலர் வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: தை 11 | 25-01-2026 காலை 10 மணியளவில்
இடம்:
கட்சித் தலைமையகம்
(இராவணன் குடில்)
சென்னை
—
வளசரவாக்கம்
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
–
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



