முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்பு இளவல் சேரன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து மாபெரும்…

0

அன்பு இளவல் சேரன் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து மாபெரும் வெற்றிப்படைப்பாக, காலத்தால் மறக்க முடியாத காதல் காவியமாகத் திகழும் 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் மறு திரையிடல் செய்யப்படுவது மிகுந்த மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

ஆட்டோகிராஃப் திரைப்படம் வெறும் படமல்ல; ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திற்குள்ளும் உள்ள உணர்வுக்குவியல்; இளமைக்கால கனவுகளின் நினைவுச்சின்னம். வாழ்வின் வளர்சிதை மாற்றங்களை கலை அனுபவத்தோடு காட்டும் காலக்கண்ணாடி!

தமிழ்க்காதல் திரைப்படங்கள் வரிசையை தலைகீழாக புரட்டிப்போடும் அளவிற்கு தலைச்சிறந்த காதல் காவியமாக திகழும் ஆட்டோகிராஃப் திரைப்படத்தை, காதல் என்றால் என்னவென்று புரிந்துகொள்ள முடியாது தடுமாறும் இன்றைய இளந்தலைமுறை பிள்ளைகள் காண வேண்டியது பேரவசியமாகும்.

எக்காலத்திற்கும் பொருந்தும் அற்புத காதல் படைப்பை
முந்தைய தலைமுறை, இந்த தலைமுறை என்றல்லாது
அனைவரும் திரையரங்கில் சென்று கண்டு களிப்போம்! காதலைக் கொண்டாடுவோம்!

அன்பு இளவல் சேரனுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

@CheranDirector

Exit mobile version