முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தாய்லாந்தில் நடைபெற்ற ‘Miss Heritage International 2025’ போட்டியில் இராமநாதபுரம்…

0

தாய்லாந்தில் நடைபெற்ற 'Miss Heritage International 2025' போட்டியில் இராமநாதபுரம் முதுகுளத்தூர் காக்கூர் கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அன்புமகள் ஜோதிமலர் மதிப்புமிக்க பண்பாட்டு தூதர் பட்டத்தை வென்ற செய்தி மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது.

தம்முடைய அறிவாற்றலாலும், தனித்திறனாலும் பன்னாட்டு அரங்கில் முதன்முறையாக இப்பட்டத்தை வெல்லும் இந்திய பிரதிநிதி எனும் சாதனையைப் படைத்து தமிழ் மண்ணிற்கு அளப்பரிய பெருமை சேர்த்துள்ள அன்புமகள் ஜோதி மலருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

Exit mobile version