முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இயக்குநரும், நடிகருமான ஆருயிர் இளவல் சண்முகம் முத்துச்சாமி அவர்களின் தந்தை…

0

இயக்குநரும், நடிகருமான ஆருயிர் இளவல் சண்முகம் முத்துச்சாமி அவர்களின் தந்தை அப்பா முத்துச்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அஞ்சலகப் பணியாளராக இருந்து ஓய்வுபெற்ற அப்பா முத்துச்சாமி அவர்கள் தம்பி சண்முகத்தை மண் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட இன உணர்வாளனாக வளர்த்தெடுத்து, சமூகத்தின் மீது தனக்கு இருந்த பற்றை அடுத்தத் தலைமுறைக்கும் கடத்தியவராவார். அவரது திடீர் மறைவு ஈடு இணையற்றது.

அப்பாவுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

Exit mobile version