க.எண்: 2025110975
நாள்: 13.11.2025
முக்கிய அறிவிப்பு:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வாக்கக நிலை முகவர்களை
(Booth Level Agent – BLA-2) நியமிப்பது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் திருத்தப்பட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது (க.எண்.23/BLA/2025-ERS, நாள்: 11.11.2025). அதன்படி, பொதுவாக, வாக்காளர் பட்டியலின் ஒவ்வொரு வாக்ககத்திற்கும் ஒரு வாக்கக நிலை முகவர் (BLA-2) நியமிக்கப்படலாம். அந்த முகவர் வாக்காளர் பட்டியலின் தொடர்புடைய வாக்ககத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டும் என்ற விதியை மாற்றியமைக்க ஆணையம் முடிவு செய்து, வாக்காளர் பட்டியலின் அதே வாக்ககத்திலிருந்து வாக்கக நிலை முகவர் (BLA-2) கிடைக்காத பட்சத்தில், அதே சட்டமன்றத் தொகுதியின் எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட வாக்காளரையும் வாக்கக நிலை முகவராக (BLA-2) நியமிக்கலாம் என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனை, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையமும் உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்ககளுக்கும் வாக்ககநிலை முகவர்களை (BLA-2) நியமிக்கவேண்டும் எனவும், அனைத்து வாக்ககளுக்கும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்கக நிலை அலுவலருடன் (Booth Level Officer – BLO) இணைந்து, தேர்தல் களப்பணியாற்றவேண்டும் எனவும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



