அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்! – சீமான்

2

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல் மரபினத்தின் வாழ்வியலையும், பண்பாட்டு நகர்வுகளையும், வரலாற்றுத் தடங்களையும் பெருமிதத்தோடு பொன் எழுத்துகளால் எழுதப்பட்டது. அதில் தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலைக் கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் எங்கள் பாட்டன் அருண்மொழிச்சோழன் பிறந்த 1078வது ஐப்பசி சதய திருநாள் இன்று!

கடற்படை கட்டி அலைகடல் மீது படைபல நடத்தி, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் மூன்றாம் பெரும் வல்லரசை நிறுவிய மாமன்னன்!

காலவெள்ளத்தால் அழியாத வண்ணம், வானை முட்டும் கோபுரத்தோடு தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பி, வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்!

நாம் தமிழர்!

https://x.com/Seeman4TN/status/1984511317483667473

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி