க.எண்: 2025100939
நாள்: 27.10.2025
அறிவிப்பு:
| இஸ்லாமியச் சொந்தங்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர் நாள்: இடம்:
|
நாளை ஐப்பசி 11ஆம் நாள் 28-10-2025 காலை 10 மணிமுதல் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலப்பாளையம், நேதாஜி சாலை, மாட்டுச்சந்தை சாலை, கே.எஸ்.மகால் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இஸ்லாமியச் சொந்தங்களுடன் கலந்துரையாடும் சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் கருத்தரங்கத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



