தலைமை அறிவிப்பு – அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேட்டினையும், திமுக அரசின் அலட்சியப் போக்கினையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

3

க.எண்: 2025100938

நாள்: 26.10.2025

அறிவிப்பு:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேட்டினையும்,
திமுக அரசின் அலட்சியப் போக்கினையும் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:
ஐப்பசி 12 | 29-10-2025 மாலை 04 மணியளவில்

இடம்:
தைலம்மை திரையரங்கம் எதிரில்
திருவாரூர்

 

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிலவும் சீர்கேட்டினையும்,
திமுக அரசின் அலட்சியப் போக்கினையும் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் சார்பாக
வருகின்ற ஐப்பசி 12ஆம் நாள் 29-10-2025 மாலை 04 மணியளவில் திருவாரூர் தைலம்மை திரையரங்கம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி