க.எண்: 2025100918
நாள்: 14.10.2025
சுற்றறிக்கை:
செயற்களம் செயலியில் கிளைக் கட்டமைப்பு விவரங்களைப்
பதிவேற்றுவது தொடர்பாக
நாம் தமிழர் கட்சியின் செயற்களம் செயலியில் இதுவரை பொறுப்புகள் அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அனைத்து விவரங்களும் (மாநில, மண்டல, மாவட்ட விவரங்கள்) பதிவேற்றப்பட்டுள்ளன. அத்தோடு அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்கு கீழுள்ள கிளைகளை நிர்வகிக்க ஏதுவாக புதிய கிளைகள் இணைத்தல், பழைய கிளைகளை புதுப்பித்தல், மாற்றம் செய்தல், கிளைக்கான தலைமைப் பொறுப்பாளரை நியமித்தல், மாற்றுதல், கிளைப் பொறுப்பாளர்களை நியமித்தல், மாற்றுதல் போன்ற கட்டமைப்புப் பணிகளை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான செயலி உள்நுழைவு அணுகல் அனைத்து மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள மாநில, மண்டல மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
திறன்பேசி செயலி (Android App) : https://play.google.com/store/apps/details?id=org.seyarkalam.naamtamilar
எனவே மேற்குறிப்பிட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளுக்கான கட்டமைப்பு விவரங்களையும் செயற்களம் செயலியில் உடனடியாக பதிவேற்றம் செய்யுமாறு, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
இச்செயலியில் உள்நுழைய தங்கள் உறுப்பினர் எண் மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும். செயலியில் கிளை கட்டமைப்பு அணுகல் கிடைக்கப்பெறாத பொறுப்பாளர்கள் செயற்களம் செயலி பயிற்றுநர் அல்லது தலைமை அலுவலகத்திற்குத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



