முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ…

0

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும்,
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, ஆவணி 01ஆம் நாள் (17.08.2025) மாலை 03 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் (இந்தியன் வங்கி எதிரில்), நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளுடன் செஞ்சிக்கோட்டை வாயிலில் உள்ள வரதராஜபெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து, கோயிலினுள் இருந்த வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, இராணிக்கோட்டை வாயிலில் உள்ள தொல்லியல் துறை கல்வெட்டுகளைப் பார்வையிட்டேன்.

https://t.co/lOZNnOPR0S

Exit mobile version