தலைமை அறிவிப்பு – தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல்

26

க.எண்: 2025080739

நாள்: 23.08.2025

 

 

முக்கிய அறிவிப்பு:

சோழங்கநல்லூர், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்கள் இன்று 23-08-2025 அதிகாலை பணிக்குச் செல்லும் போது தேங்கி நின்ற மழை நீரில் கிடந்த கம்பிவடம் மூலம் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி அவர்களின் கண்ணகி நகர் இல்லத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று 23-08-2025 பிற்பகல் 01 மணியளவில் நேரில் சென்று ஆதரவற்று நிற்கும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற விரைகிறார்.

 

உடன் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி