எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்ப் பேராயத்தின் புரவலரும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, பேரன்பிற்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய பெருந்தமிழர் முனைவர் ஐயா பாரிவேந்தர் அவர்களின் 86வது அகவை நாளில், என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வி, மருத்துவம் இரண்டிலும் ஏழை-எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்திலும், பணம் செலுத்த முடியாதவர்களின் நிலை அறிந்து இலவசமாகவும் சேவையாற்றி வரும் ஐயாவின் அறப்பணிகள் மிகுந்த போற்றுதற்குரியது.
கல்வி வள்ளல், பெருந்தமிழர் ஐயா பாரிவேந்தர் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்தோடும், உள்ள நிறைவோடும் வாழ்ந்து தமிழ்ப்பேரினத்திற்கு அருந்தொண்டு ஆற்றிட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி