தலைமை அறிவிப்பு – சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் 166ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான்

31

க.எண்: 2025070648

நாள்: 06.07.2025

அறிவிப்பு:

சமூகநீதிப் போராளி
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார்

166ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு
தலைமை:
செந்தமிழன் சீமான்
நாள்:
ஆனி 23 | 07-07-2025 காலை 10 மணியளவில்

இடம்:
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் நினைவிடம்
(அண்ணல் காந்தி மண்டபம்)
சென்னை – கிண்டி

சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 166 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 07-07-2025 அன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணல் காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் நினைவிடத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அதே இடத்திலேயே ‘புரட்சித் தமிழகம் கட்சி’ சார்பாக முன்னெடுக்கப்படவிருக்கும் கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கிவைக்கவிருக்கிறார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி