முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தினுடைய முன்னாள் இளைஞர் பாசறைப்…

0

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, முத்துப்பேட்டை ஒன்றியத்தினுடைய முன்னாள் இளைஞர் பாசறைப் பொறுப்பாளரும், இடும்பாவனம், கீழவாடியக்காடு பகுதியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளருமான அன்புத்தம்பி குணா என்கிற குணசீலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமடைந்தேன்.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியின் தொடக்கம் காலம் முதல் அயராது களப்பணியாற்றிய தம்பியின் இழப்பு ஈடு இணையற்றது.

அன்புத்தம்பி குணா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்.

Exit mobile version