முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட…

0

நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 16வது வட்டத்தைச் சேர்ந்த மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தங்கை சுப்புலட்சுமி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, மகளிர் பாசறையில் களப்பணியாற்றிவந்த சுப்புலட்சுமி அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தங்கையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை சுப்புலட்சுமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

Exit mobile version