நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு நகர இணைச் செயலாளர் அன்புத்தம்பி யுவராஜ் அவர்களின் பாட்டனார் தசரதன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் தம்பி யுவராஜ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா தசரதன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



