வெண்ணைய்மலை பகுதியில் பூர்வகுடி மக்களின் குடியிருப்பு அகற்ற முனைப்பு: பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் துணை நிற்ப்போம் என சீமான் உறுதி!

58

கரூர் மாவட்டம், வெண்ணைய்மலை பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்ற பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்று கூறி திமுக அரசு வலுக்கட்டாயமாக அகற்ற முனைகிறது. தங்கள் குடியிருப்புகளைக் காப்பாற்ற அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை 21-10-2024 அன்று காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கோரிக்கைகளைக் கேட்டறிவதற்காகச் செல்லவிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை கரூரில் அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து வெண்ணெய்மலை செல்ல முடியாத வகையில் விடுதியைச் சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டும், அனைத்து சாலைகளும் தடுப்பு வைத்து வாகனங்கள் உள்ளே வெளியே செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டும் இருந்தது. இதனையறிந்த வெண்ணெய்மலை மக்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி சீமான் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கே திரண்டு வந்து, அரசின் அடக்குமுறைக்கு எதிராகத் துணைநிற்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களைச் சந்தித்து கண்ணீருடன் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

குடியிருப்புகள் அகற்றப்படாமல் இருக்க உரிய சட்டப் போராட்டமும், மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுக்க நாம் தமிழர் கட்சி வெண்ணெய்மலை மக்களுடன் உறுதியாகத் துணை நிற்கும் என சீமான் அவர்கள் உறுதியளித்தார். காவல்துறையின் வலியுறுத்தலின் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் வெண்ணெய்மலை மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் அவர்கள் வலியுறுத்தினார்.

🔴நேரலை21-10-2024 குடியிருப்புகள் அகற்றம்! பாதிக்கப்பட்ட மக்களுடன் சீமான் செய்தியாளர் சந்திப்பு கரூர்

சீமான்  செய்தியாளர் சந்திப்பு | கரூர் மாவட்டக் கலந்தாய்வு | தமிழ்த்தாய் வாழ்த்து |  | திருமாவளவன்