திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

73

நாம் தமிழர் கட்சி
திருவரங்கம் தொகுதியின் கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்தான கலந்தாய்வு கூட்டம்,

வழக்கறிஞர் திரு. இரா.பிரபு M.A, B.L.,
திருச்சி மண்டலச் செயலாளர்
அவர்களின் தலைமையில்

திரு. சுப.கண்ணன்,
மாவட்டத் தலைவர்

திரு. ச.முருகேசன் M.E, (Ph.D),
மாவட்டச் செயலாளர்

திரு. பழ.இராசா அழகப்பன் D.C.E,
மாவட்டப் பொருளாளர்
ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

கலந்தாய்வுக் கூட்டத்தில்:

1) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி

திருவரங்கம் தொகுதி => திருவரங்கம் மாவட்டமாக
மாற்றப்பட்டு –

(i) திருவரங்கம் கிழக்கு தொகுதி
(ii) திருவரங்கம் மேற்கு தொகுதி
(iii) திருவரங்கம் தெற்கு தொகுதி

ஆகிய மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதன் கட்டமைப்பு குறித்தான தகவல்கள் – மாவட்டத் தலைவர் திரு. சுப. கண்ணன் அவர்களால் விவரிக்கப்பட்டது.

2. இம்மூன்று தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான விருப்பமனுக்கள் பெறப்பட்டது.

3. நாம் தமிழர் கட்சி செயலி மூலம் வருகைப்பதிவேடு செய்யும் வழிமுறைகள் – மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் திரு. ஜெய்சன் அவர்களால் விளக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.