நாம் தமிழர் கட்சியின் பொருளாளர் என்னுயிர் அண்ணன் வழக்கறிஞர் இராவணன் அவர்களின் அன்பு மகள் மதிவதனி இராவணன் அவர்கள் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில், இந்திய ஒன்றிய அளவில் 447ஆவது இடத்தைப் பெற்று தேர்ச்சியடைந்துள்ள செய்தியறிந்து பெருமிதமும், பேருவகையும் அடைந்தேன்.
அன்பு மகள் மதிவதனியின் அயராத உழைப்பும், விடா முயற்சியுமே அவள் இத்தகைய சீர்மிகு உயரத்தை எட்ட உதவியுள்ளது. தன்னம்பிக்கை நிறைந்த பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை தனது பெருவெற்றியின் மூலம் இவ்வுலகிற்குப் பேரறிவிப்பு செய்திருக்கிறாள் மகள் மதிவதனி.
'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்' எனும் நமது பாட்டன் தமிழ்மறையோன் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுக்கிணங்க, மகளைக் கல்வியில் சிறந்து விளங்கச்செய்து, வெற்றிவாகை சூடிட, அவளது உயர்விலும் தாழ்விலும் உற்ற தந்தையாக அவளது தோளோடு துணைநின்ற எனது அண்ணன் இராவணன் அவர்களது அன்பும் ஈகமும் மிகுந்த போற்றுதற்குரியது.
மக்கள் பணியில் சிறந்து விளங்கிடவும், மேலும் பல சாதனைகள் படைத்திடவும் அன்பு மகளுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்!




