செங்கல்பட்டு மாவட்டம், மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று…

0

செங்கல்பட்டு மாவட்டம், மணமை கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று பிற்பகலில் எதிரெதிரே வந்துகொண்டிருந்த ஆட்டோவும் தமிழ்நாடு அரசுப் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் சிக்குண்டு, ஆட்டோவில் பயணம் செய்த நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் அன்புத்தம்பி ஐயனார் அவர்களின் உறவினர்களான சென்னை ஆலந்தூர் வ. உ. சி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா காமாட்சி, ஐயா கோவிந்தன், அம்மையார் அமுலு, தங்கை சுகன்யா குழந்தைகள் ஹரிபிரியா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்பு நிதியினை வழங்குவதோடு, இவ்விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், எதிர்காலங்களில் இதுபோன்ற பெருந்துயர விபத்துகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Exit mobile version