விளைநிலங்களைப் பறிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – சேத்தியாத்தோப்பு

182

சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி மக்களைக் கைது செய்யும் திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்தும், நிலம் வழங்கிய குடும்பங்களுக்கு ஒப்பந்தப்படி பணி வழங்காமலும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், தமிழ் இளைஞர்களுக்குப் பணி வழங்காமலும் தொடர்ந்து இனப்பாகுபாடு கடைப்பிடிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 14-03-2023 அன்று கடலூர்  மாவட்டம் சேத்தியாத்தோப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீமான் எழுச்சியுரை:

14-03-2023 கடலூர் - சீமான் கண்டனவுரை NLCக்கு துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

NLCக்கு துணைபோகும் திமுக அரசு! - மாபெரும் ஆர்ப்பாட்டம் - சேத்தியாத்தோப்பு | Mass Protest Against NLC & DMK Govt.